
நட்பு மற்றும் உண்மையான காதலை சொல்லும் வகையில் பிரேம் குமார் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் 96.
இதில் ராம், ஜானுவாக வாழ்ந்திருந்தனர் விஜய்சேதுபதியும், திரிஷாவும்.
விஜய் சேதுபதி ஒரு ஆந்தாலஜி திரைப்படத்திற்காக பிரபல இயக்குனர்களுடன் இணைய உள்ளார். அதில் 96 படத்தை இயக்கிய பிரேம்குமாரும் ஒருவர் என்கிற தகவல் தற்போது உறுதியாகியுள்ளது.
மேலும் 3 இயக்குநர்கள் பேச்சுவார்த்தையில் உள்ளனர். பிரேம்குமார் விஜய் சேதுபதி இணையும் பகுதி மீண்டும் தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படும் என்கிறது படக்குழு.இதில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக திரிஷா மீண்டும் இணைகிறாரா என்பது குறித்தும் பேசப்பட்டு வருகிறதாம்,. விஜய் சேதுபதி, தற்போது,மாஸ்டர், லாபம், காத்து வாக்குல ரெண்டு காதல், துக்ளக் தர்பார், மாமானிதன், கடைசி விவசாயி , யாதும் ஊரே யாவரும் கேளிர் உள்பட பல படங்களில் மிகவும் பிசியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.












