
ஆசைப் பட்ட பொருளை ஆட்டயப்போடுவது என்பது ஆண்பெண் இருவருக்குமே பொருந்தக்கூடியது.
திருடுவது தப்பில்லையா ? தப்புதான் .மனசு ஆசைப்பட்டுருச்சே சுவாமி?
எனக்குத் தெரிந்த சில பேனா மன்னர்கள் என சொல்லிக் கொள்கிறவர்கள் செய்தவைகளை நேரில் பார்த்த புண்ணியம் எனக்கு இருக்கு.?
ஒரு சினிமா நிகழ்ச்சி.
மாலை நேர சிற்றுண்டி . ஒருவர் தட்டு எடுத்து வடைகளை வாங்கினார். இரண்டு வடை. சற்று தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த அவரது ஸ்கூட்டருக்கு எடுத்து சென்றவர் பாக்ஸை திறந்து வடைகளை வைத்தார் . இப்படி பல முறை வடைகளை வாங்குவதும் ,ஸ்கூட்டரில் பதுக்குவதுமாக இருந்தார் .அடப்பாவி!
இது சக நண்பரின் கண்களில் பட்டுவிட்டது. அவர் என்னிடம் சொல்ல நான் கையில் வடையுடன் பிடித்துக் கொள்ள சிறு ரகளை.
இப்ப எதுக்கு இந்த சுய கதை என்கிறீர்களா? காரணம் இருக்கு!
ராஷ்மிகா மன்டனா .கன்னடம் ,தெலுங்கு ,தமிழ் மும்மொழி நடிகை.
இவரை லபக் ராணி என்றும் சொல்லலாம்.
ஹோட்டலுக்குப் போனால் அறையில் இருக்கிற ஷாம்புகளை எடுத்து வந்து விடுவாராம். அவரே சொன்ன இன்னொரு தகவல் தலையணை உறை அழகாக இருந்தால் அதையும் கிளப்பிக்கொண்டு வந்துவிடுவது வழக்கம்.
நல்ல பழக்கம்டா சாமி.!












