உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் சின்னத்திரை நிகழ்ச்சிக்குள் ‘வைல்ட் கார்டு நுழைவாக பின்னணி பாடகி சுசித்ரா பங்கேற்கஇருக்கிறார். அவரது பிரவேசம் இன்று நடக்கலாம். இதற்காக அவரை தனிமைப்படுத்தி ஒரு விடுதியில் தங்க வைத்திருந்தனர்.,
இதை உறுதி படுத்தும் வகையில், நடிகை கஸ்தூரி,” 60 கேமரா இருக்கு ஹவுஸ்மேட்ஸ் சோஷியல் டிஸ்டன்ஸ மெயின்டைன் பண்ணுங்க” என்று தனது டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார். சுசித்ரா என்றாலே சுசி லீக்ஸ் நினைவுக்கு வரமால் இருக்காது.
கஸ்தூரியின் டுவிட்டுக்கு சுசித்ராவும் பதில் கொடுத்திருந்தார்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுசித்ரா தங்க வைக்கப்பட்டுள்ள ஓட்டல் அறையிலிருந்து, ‘என்னை யாரோ கொல்லப் பாக்குறாங்க’ என அலறியடித்தபடி சுசித்ரா வெளியே ஓடி வந்ததாகவும், இதனை, பார்த்து அதிர்ச்சியடைந்த ஓட்டல் நிர்வாகத்தினர் சுசித்ராவிடம் இது குறித்து விசாரித்த போது, யாரோ தனது அறைக்கதவை தட்டியதாக கூறி சுசித்ரா கதறி அழுததாகவும் அவருக்கு ஓட்டல் ஊழியர்கள் அப்படி யாரும் வரவில்லை, அப்படியான ஒரு சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்றும் தெளிவு படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இது நாடகமா அல்லது விஜய் டி .வி.யின் ஸ்க்ரிப்டில் இதுவும் இருக்கிறதா என்பது தெரியவில்லை.
இதையடுத்து சின்னத்திரை நிகழ்ச்சிக் குழுவினர் சுசித்ராவிற்கு மன நல மருத்துவரை வைத்து கவுன்சிலிங்கும் வழங்கியுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே சுசித்ரா ஒரு முறை தனது சகோதரியுடன் சண்டை போட்டுகொண்டு ஓ ட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது இதே போல் அவர் நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மீண்டும் அதே மாதிரியான சம்பவம் நடந்துள்ளதால்,திட்டமிட்டபடி சுசித்ரா கமல் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியுமா என்பது கேள்வி குறி என்கிறார்கள்.












