
தன்னுடைய உடல்நிலையைக் காரணம் காட்டி அரசியலை விட்டு ஒதுங்குவதற்கு நடிகர் ரஜினிகாந்த் முடிவெடுத்திருக்கிறார் என்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
தனக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருப்பதை அவரே ஒப்புக்கொண்டு இருக்கிறார். இதனால் தொற்று அபாயம் நேரிடும் ஆபத்து இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளார். தீவிர தேர்தல் பிரசாரத்துக்கு தன்னுடைய உடல்நலம் ஒத்து வராது என்பதையும் சுட்டிக்காட்டிவிட்டார்.
இந்த நிலையில் பாஜகவில் அண்மையில் சேர்ந்திருக்கிற குஷ்பூ சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு சில அறிவுரைகளை சொல்லியிருக்கிறார்.
“அன்புள்ள ரஜினி சார் ,
உங்களது ஆரோக்கியமான உடல்நலம் ,உங்களது மகிழ்ச்சி இவைகளைத்தவிர எங்களுக்கு வேறு சந்தோசம் கிடையாது.
நீங்கள் எங்களின் அபூர்வ வைரம்.
நீங்கள் எங்களின் சொத்து உங்களுக்கு எது நல்லதோ அதை செய்யுங்கள்.!எந்த வகையிலும் உங்கள் மீதான எங்களின் அன்பு குறையப்போவதில்லை.எங்களுக்கு நீங்கள் முன்மாதிரியானவர் ” என்று சொல்லியிருக்கிறார் குஷ்பு.












