
“ஈஸ்வரன் படத்தின் டீசர் நாளை அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் வெளியிடப்படும்” என்று சிலம்பரசன் அறிவித்திருக்கிறார்.
பொதுவாக திரையுலகத்தினர் நல்லநேரம் பார்ப்பது வழக்கம்தான். ஆனால் அதிகாலை 4மணி அளவில் இதுவரை எந்த நிகழ்வும் நடந்ததாகத் தெரியவில்லை. அந்த நேரத்தில் நாயக ,நாயகியர் எழுவதே அதிசயம்தான்.
ஆனால் சிலம்பரசன் தன்னுடைய ஈஸ்வரன் படத்தின் டீசரை பிரம்ம முகூர்த்தத்தில் வெளியிடுவது ஏன்?
பதினெண் புராணங்களில் ஒன்றான சிவபுராணத்தில் ருத்ர சம்கிதையின் சிருஷ்டி காண்டம் 11 மற்றும் 13 வது அத்தியாயங்களில் பிரம்ம முகூர்த்தத்தின் சிறப்பைப் பற்றி உயர்வாக சொல்லப்பட்டிருக்கிறது .சிவபுராணம் என்பது சிவனின் வரலாறு.
சிவபுராணத்தில் மட்டுமில்லை ,பாகவதத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது.அதிகாலை 4.24 முதல் 5.12 மணி வரை இடைப்பட்ட காலமே பிரம்மமுகூர்த்தம்.
மனதின் சிக்கல்களை அகற்றவும் இறைவனின் அன்பில் மனதை நிலை நிறுத்தவும், இறைவனால் கொடுக்கப்பட்ட ஒரு அரிய நேரம் அது.! சிவபெருமானை நினைத்து பிரம்மன் அற்புத வரங்களை பெற்றதால் பிரம்ம முகூர்த்தம் என்ற பெயர் வந்தது.
இந்த நேரத்தில் விழித்திருந்து குளித்தோ..முடியாதவர்கள் கை,கால்களை கழுவி , பல் துலக்கி தன்னை நெற்றியின் மத்தியில் வசிக்கும் ஒரு ஒளியான ஆத்மா என்று உணர்ந்து பரமாத்மா சிவனை ஒரு உடலற்ற ஒளியாக நினைவு செய்ய பிரம்மா எந்த சக்தியை அடைந்தாரோ அப்படிப்பட்ட அளவிடமுடியாத சக்தியை ஈஸ்வரனிடமிருந்து நாமும் அடையமுடியும் என்பது நம்பிக்கை.தொன்மையான நம்பிக்கைகளை மறந்து விடாமல் மக்கள் மத்தியில் மலரச் செய்வதற்கு இதுவும் ஒரு வகையான சேவைதான்!
இது நம்மிடம் காலம் காலமாக இருந்து வருகிறது..இந்த நம்பிக்கை சிலம்பரசன் என்கிற எஸ்.டி ஆருக்கும் இருக்கிறது. அவரது ரசிகர்களுக்கும் இருக்கிறது .நாளை காலையில் தெறிக்க விடப் போகிறார்கள்.












