சுற்றிலும் மீன்கள் நீந்த நீல நிறக்கடலுக்கடியில் கண் நிறைந்த கண்ணாளனுடன் கட்டிலில் கட்டித் தழுவிக் கிடக்கும் சுகம் இருக்கே …சொல்லமுடியுமா அந்த சொர்க்கத்து வாழ்க்கையை.!
அப்படி ஒரு வாழ்க்கை…கணவன் கிச்சுலுவுடன் காஜல் அகர்வால் ஹனிமூன் கொண்டாடிவிட்டார். பை நிறைய சம்பாதித்து சேர்த்து வைத்து என்ன செய்ய? பணத்தினை மெத்தையில் பரப்பி அதன் மீது கட்டி உருண்டு காதல் செய்ய முடியுமா?
ஐயோ,நோட்டு கிழிந்து விடுமே என்கிற அச்சம்தான் கனி இதழில் பதிக்கிறபோது வந்து தொலையும். உச்சமும் உயிரற்றுப் போகும் .எந்திரத்தனமான தேனிலவு என்கிற எரிச்சல் வந்து சேரும் .
இதனால் காஜல் அகர்வால் கணவருடன் வித்தியாசமாக ஹனிமூன் கொண்டாடிவிட்டு கடலில் குளித்த கதையை படங்களுடன் சொல்லியிருக்கிறார் .பாருங்கள் !












