தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம்வரும் நடிகர் அஜித்குமார். கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பந்தய போட்டிகளிலும் கவனம் செலுத்தி, ‘அஜித்குமார் ரேசிங்’ என்ற தனது சொந்த கார் பந்தய அணியையும் தொடங்கி, துபாய், பெல்ஜியம், ஸ்பெயின், அபுதாபி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றபல்வேறு சர்வ தேச கார் பந்தய போட்டிகளில் கலந்து கொண்டு,பரிசுகளை வென்று வெற்றிகளையும் குவித்து வருகிறார்.
இந்நிலையில் அஜித்குமார் அணி தற்போது ‘லீ மேன் கப்’ தொடரில் பங்கேற்று வருகிறது. பெல்ஜியத்தில் நடந்த ’24எச் சீரிஸ் ஜிடி3 ப்ரோ-ஏஎம்’ போட்டியில் அஜித்குமார் அணி 2-வது இடம் பிடித்து அசத்தியுள்ளது. இந்த வெற்றியை நடிகர் அஜித்குமார் இந்தியா கொடியை பறக்கவிட்டு கொண்டாடி மகிழ்ந்தார்
அஜித்குமாரின் வெற்றி அவரது ரசிகர்களுக்கு மிகப் பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து நடிகர் அஜித்குமார் அணி இந்த ஆண்டு பங்கேற்கும் ரேஸ் போட்டிகளுக்கான அட்டவணையும் வெளியாகியுள்ளது கடந்த மார்ச் மாதம் தொடங்கி 2027-ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி வரை கார் ரேஸ் போட்டிகளில் அஜித் தீவிரமாக ஈடுபடவுள்ளார்.












