
தனது அரசியல் பிரவேசம் பற்றி இன்று சூப்பர்ஸ்டார் ரஜினி அறிவிப்பார் என்கிற ஆர்வத்துடன் எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது .!
கட்சியே ஆரம்பிக்காத நிலையில் சில மாவட்டங்களில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளாக இருப்பவர்கள் பணம் சம்பாதிக்கிற எண்ணத்துடன் சில அரசியல் கட்சிகளுடன் பேச்சு நடத்தியதாக ரஜினிக்கு தெரிய வந்திருக்கிறது. 
பணம் சம்பாதிக்கிற எண்ணத்துடன் யாரும் இங்கு இருக்க வேண்டாம் என்று எச்சரித்த நிலையில் அதையும் மீறி சிலர் நடந்திருப்பது ரஜினிக்கு மிகுந்த கவலையை தந்திருக்கிறது.அதை இந்த கூட் டத்தில் ரஜினி பகிரங்கமாக வெளிப்படுத்தியிருக்கிறார். “அவர்களை நானே தூக்கி எறிவேன் ” என்று எச்சரித்திருப்பதாகவும் தெரிகிறது.இத்தகைய நிலையில்தான் மாவட்ட நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து பேசியிருக்கிறார்.
“கட்சி ஆரம்பிப்பது பற்றி நானே அறிவிப்பேன் .அதுவரை பொறுத்திருங்கள்.”என்று ரஜினி சொல்லியிருப்பதாக சொல்கிறார்கள். அதனால் பிப்ரவரியில் கட்சி பற்றிய அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கிறார்கள். அவரது உடல் நிலைபற்றி மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டிய அவசியம் இருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியதிருக்கிறது.
இன்று மாலையோ நாளை காலையிலோ ரஜினியின் முக்கிய அறிவிப்பு வெளிவரலாம் என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது.












