
எந்த இடத்தில் குத்தினால் என்ன …பச்சை குத்துவதற்கு இன்ன இன்ன இடங்கள் என்று ஏதாவது விதிகள் இருக்கிறதா?
தற்போது சினிமா நடிகைகள் டாட்டூஸ் என்கிற பச்சையை கை ,தொடை ,கழுத்தின் பின்பக்கம் .மார்பகம் என பல இடங்களில் குத்திக்கொள்கிறார்கள்.
இதில் பூனம் கவுர் என்கிற நடிகை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த நெஞ்சில் இருக்கும் வரை என்கிற படத்தில் அறிமுகம் ஆனார்.பின்னர் உலகநாயகன் கமல் ,விஷால் ஆகியோரது படங்களில் நடித்தார் .பல மொழிகளில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
வாய்ப்பு இல்லாத நடிகைகள் போட்டோ ஷூட் நடத்தி அந்தப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு நானும் இருக்கிறேன் என நினைவு படுத்துவதைப்போல பூனம் கவுர் மார்பகத்தின் மேல் பகுதியில் திரிசூலம் ,நாகம் ஆகிய டாட்டூஸ் குத்திக்கொண்டு படத்தை வெளியிட்டிருக்கிறார்.
“அந்த இடத்தில் எப்படி சூலம் ,நாகம் படங்களை குத்தலாம் .இந்து மதத்தை அவமதித்து விட்டார் “என்று சிலர் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள்.
அந்த இடத்தில் குத்தியதால் உங்களுக்கு என்னய்யா நோகுது?












