மேலே உள்ள படத்தைப்பார்த்தால் அது நிஜமல்ல ,எதோ ஒரு படத்தின் ஷூட்டிங் போஸ்டர் என்பது நல்லாகவே தெரியும்.
ஏனென்றால் அதில் ஒய்.ஜி. மகேந்திரன் படமும் இருக்கிறது. எஸ்.ஏ.சந்திரசேகர் படம் மட்டும் இருந்திருந்தால் நமக்கு அது அரசியல் கட்சி மாநாடாக நினைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.
பாண்டிச்சேரியியில் மாநாடு பட ஷூட்டிங் நடந்தபோது எடுக்கப்பட்ட படம்.
அந்த படத்தில் எஸ் ஏ சந்திரசேகரன் முத்தமிழர் முன்னேற்றக்கழகத் தலைவராக நடிக்கிறார். அந்த கழகத்தின் 12 ஆவது மாநாடு நடப்பது போன்ற காட்சியைத்தான் படமாக்கியிருக்கிறார்கள்.கோவை கொடிசியா வளாகத்தில் நடப்பது போன்ற காட்சி .
நிஜத்திலேயே கட்சி ஆரம்பித்திருந்தால் இந்த நேரத்தில் விஜய் ரசிகர்கள் அதகளம் பண்ணியிருப்பார்கள். எங்கும் விஜய்யின் போஸ்டர்களும் பதாகைகளும்தான் கண்களுக்குத் தெரியும்.
அதைத்தான் கற்பனையில் சந்திரசேகர் போஸ்டர் உணர்த்துகிறது. போஸ்டரைப்பார்த்தால் எஸ்.ஏ.சியின் உள்ளுக்குள் இருக்கிற ஆவேசமுள்ள ஒரு நடிகன் தெரிகிறான்.
இந்த போஸ்டர்படி பார்த்தால் சிலம்பரசனின் கேரக்டர் என்ன என்பதை ஊகிக்க முடிகிறதா?
எந்த கழகத்தை நோக்கி அம்பு வீசுகிறார்கள் என்பதும் தெரியவில்லை.












