
களவாணி படத்தின் வழியாக தமிழகத்தின் கோடம்பாக்கத்தில் குடி புகுந்தவர் ஓவியா..
அதன் பின்னர் சில படங்கள் சீராகத்தான் போய்க் கொண்டிருந்தது.
இடையில் பிக்பாஸ் வந்தது. அதில் அவருக்காக ‘ஆர்மிகள்’ ஆரம்பித்தனர் அவரது விசுவாசிகள்.
முத்தம் கொடுத்து ஆரவ்வை வசப்படுத்தினார் ஓவியா.
காதல் என விஜய் டிவி பற்ற வைத்தது. அவர்களது எதிர்பார்ப்புக்கு ஏற்ப டி .ஆர் .பி. ரேட் எகிறியது.
பிக்பாசை விட்டு வெளியில் வந்ததும் படங்கள் வாய்ப்புகள் வந்து குவியும் என எதிர்பார்த்தார்.
ஆனால் பிக்பாஸ் புகழ் எல்லாம் மாயை என்பது பின்னர்தான் தெரிய வந்தது. சூரியனை பார்த்த பனி மறைவது போல அந்த புகழ் காற்றோடு கரைந்தது.
பின்னர் சோசியல் மீடியாவில் சிலரைப்போல போட்டோக்களை போட்டுப்பார்த்தார்.
ம்…. ஊகும் ! கடை விரித்தேன் ,கொள்வார் யாருமில்லை என்றாகிப்போனது.
தற்போது தாடிக்காரர் ஒருவருடன் காதலில் விழுந்து விட்டாராம்.
அவருக்கு முத்தம் கொடுத்த படத்தை வெளியிட்டு பரபரப்பினை கிளப்பி இருக்கிறார்.
அதென்னமோ தெரியவில்லை. நடிகைகளுக்கு தாடி வைத்தவர்கள் என்றால் ரொம்பவுமே பிடிக்கிறது.












