
ரவுடி பேபி வழியாக உலக ரசிகர்களையே கலக்கியவர் சாய் பல்லவி .சென்னைப்பொண்ணு.
இந்தப்பொண்ணின் தங்கை பூஜாவும் தமிழ்ச்சினிமாவை கலக்க வருகிறார்.
ஸ்டண்ட் சிவா இயக்குநராக களமிறங்கும் படத்தின் நாயகியாக பூஜா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
தற்போது இயக்குநர் விஜய்யின் கதையை இயக்கும் பொறுப்பு சிவாவுக்கு. இந்த படத்தின் தயாரிப்பாளரும் விஜய்தான்.! இந்த படத்தில்தான் பூஜா நடிக்கவிருக்கிறார்.( இவருக்கு காரா என்கிற குறும் பட அனுபவம் உண்டு.)
இந்த படத்தில் சமுத்திரக்கனி ,சிவா இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இயக்குநர் விஜய்யின் துணை இயக்குநராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.












