
“யோவ் வெங்காயம் ,நான் பெரியாரிஸ்ட்! பெண்ணுரிமை பேசுகிறவள் ,எனக்கே அட்வைஸா ?”என்று உத்திரகாண்ட் முதல்வரை எச்சரித்திருக்கிறார் திவ்யா சத்யராஜ்.!
சத்யராஜின் மகள் .மகிழ்மதி இயக்க அமைப்பாளர். ஊட்டச்சத்து நிபுணர்.
முழங்கால் தெரிகிற அளவுக்கு கிழிந்த ஜீன்ஸ் போடுகிற பெண்களை கண்டித்து உத்தரகாண்ட் முதலமைச்சர் தீரத் சிங் ரவாத் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இதற்கு சத்யராஜின் மகள் திவ்யா பதில் அறிக்கை கொடுத்திருக்கிறார்.
“நான் பெரியாரிஸ்ட் .தீரத் சிங் ரவாத்தின் அறிக்கையை கடுமையாக கண்டிக்கிறேன்.பலர் குட்டை டவுசர் போட்டு படம் எடுப்பதை எதிர்த்து கண்டிக்கிறார்கள். அரசியல்வாதியாக வருவதற்கு விரும்புகிறவர் காட்டன் சேலை அணிந்து கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்குகிறார்கள்.
ஒவ்வொரு பெண்ணுக்கும் எத்தகைய ஆடைகள் அணிய வேண்டும் என்கிற உரிமை இருக்கிறது.
நாங்கள் எந்த மாதிரியான ஆடைகள் அணிய வேண்டும் அன்று புத்திமதி சொல்லுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.”என அறிக்கை கொடுத்திருக்கிறார்.
கிழிந்த ஜீன்ஸ் அணிந்து புகைப்படமும் வெளியிட்டிருக்கிறார்.












