Wednesday, June 17, 2026
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
Advertisement
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology
No Result
View All Result
Cinema Murasam
No Result
View All Result
Home News

‘திரிஷ்யம் 3’ தெலுங்கு ஓடிடி வெளியீட்டுக்கு நீதிமன்றம் தடை!

admin by admin
June 17, 2026
in News
420 4
0
587
SHARES
3.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

நடிகர் மோகன்லால், மீனா உள்ளிட்டோர் நடித்து, ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவான ‘திரிஷ்யம் 3’ மலையாளத் திரைப்படத்தின் பிரத்யேக தெலுங்கு உரிமைகளின் முழு மற்றும் ஒரே உரிமையாளரான, ஸ்ரீப்ரியா சேதுபதி மற்றும் ராஜ்குமார் சேதுபதி தலைமையிலான ராஜ்குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், தனது அறிவுசார் சொத்துரிமையைப் பாதுகாப்பதற்காக சட்டப்பூர்வ நடவடிக்கைகளை சமீபத்தில் தொடங்கியது.

‘திரிஷ்யம் 3’ திரைப்படத்தின் தெலுங்கு உரிமைகளின் மீதான தனது பிரத்யேக உரிமையை உறுதிப்படுத்தும் வகையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்நிறுவனம் வழக்குத் தொடர்ந்துள்ளது.

You might also like

விஜய்க்கு தைரியமும், மன வலிமையையும் வேணும்! சமந்தா பரபரப்பு பதிவு!

‘ஹார்ட்டின்’ திரைப்படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது! – மடோனா செபாஸ்டியன்!

  ‘சத்தியவான்சாவித்திரி’  வெளியாகும் தேதி அறிவிப்பு! 

இந்த மனுவில், ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனத்தின் எம்.ஜே. ஆண்டனி, இயக்குநர் ஜீத்து ஜோசப், பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் பென் ஸ்டுடியோஸ் ஆகியோரோ அல்லது அவர்களின் முகவர்கள், ஊழியர்கள், உரிமை பெற்றவர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களோ, ‘திரிஷ்யம் 3’ திரைப்படத்தை தெலுங்கு மொழியில் உலகெங்கிலும் எந்த முறையிலும் மறுஆக்கம் செய்யவோ, தயாரிக்கவோ அல்லது வெளியிடவோ கூடாது என்றும், ராஜ்குமார் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் பிரத்யேக பதிப்புரிமையை (Copyright) மீறுவதைத் தடுக்கும் வகையிலும் நிரந்தரத் தடை உத்தரவு (Permanent Injunction) கோரப்பட்டுள்ளது.

இவ்வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. ராஜ்குமார் தியேட்டர்ஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கே. ரவி ஆஜராகி நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்தார். வாதங்களைக் கேட்டறிந்த சென்னை உயர் நீதிமன்றம், எதிர்மனுதாரர்கள் அனைவருக்கும் 3 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில், ‘திரிஷ்யம் 3’ தெலுங்கு ஓடிடி வெளியீட்டுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தற்போது இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்த வழக்கில் மேற்கொண்டு உத்தரவு வரும் வரை இப்படத்தை ஓடிடி தளங்களில் வெளியிடக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“சட்ட நடவடிக்கைகள் நிலுவையில் உள்ளதைக் கருத்தில் கொண்டு, எந்தவொரு நபரோ, நிறுவனமோ, தயாரிப்பாளரோ, விநியோகஸ்தரோ, திரையரங்க உரிமையாளரோ, ஓடிடி (OTT) தளங்களோ, அல்லது வேறு தரப்பினரோ ‘திரிஷ்யம் 3’ திரைப்படத்தின் தெலுங்கு படைப்பாக்க உரிமைகள் அல்லது தெலுங்கு மொழி வெளியீட்டு உரிமைகள் தொடர்பாக ஏதேனும் ஒப்பந்தம், உடன்படிக்கை அல்லது வணிக ரீதியான புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொண்டால், அது முற்றிலும் அவர்களின் சொந்தப் பொறுப்பிலேயே (At their own risk) அமையும். மேலும், அத்தகைய ஒப்பந்தங்கள் அனைத்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டதாகவே இருக்கும்,” என்று ராஜ்குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் தெரிவித்துள்ளது.

***

admin

admin

Related Posts

விஜய்க்கு தைரியமும், மன வலிமையையும் வேணும்! சமந்தா பரபரப்பு பதிவு!
News

விஜய்க்கு தைரியமும், மன வலிமையையும் வேணும்! சமந்தா பரபரப்பு பதிவு!

by admin
June 17, 2026
‘ஹார்ட்டின்’ திரைப்படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது! – மடோனா செபாஸ்டியன்!
News

‘ஹார்ட்டின்’ திரைப்படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது! – மடோனா செபாஸ்டியன்!

by admin
June 17, 2026
  ‘சத்தியவான்சாவித்திரி’  வெளியாகும் தேதி அறிவிப்பு! 
News

  ‘சத்தியவான்சாவித்திரி’  வெளியாகும் தேதி அறிவிப்பு! 

by admin
June 17, 2026
GEN Z தலைமுறையினரின் காதல், காமெடி கலட்டா ‘லவ் ஓ லவ்’
News

GEN Z தலைமுறையினரின் காதல், காமெடி கலட்டா ‘லவ் ஓ லவ்’

by admin
June 17, 2026
அல்லு அர்ஜூன்  படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் மோடி!
News

அல்லு அர்ஜூன் படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் மோடி!

by admin
June 16, 2026

Recent News

விஜய்க்கு தைரியமும், மன வலிமையையும் வேணும்! சமந்தா பரபரப்பு பதிவு!

விஜய்க்கு தைரியமும், மன வலிமையையும் வேணும்! சமந்தா பரபரப்பு பதிவு!

June 17, 2026
‘ஹார்ட்டின்’ திரைப்படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது! – மடோனா செபாஸ்டியன்!

‘ஹார்ட்டின்’ திரைப்படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது! – மடோனா செபாஸ்டியன்!

June 17, 2026
  ‘சத்தியவான்சாவித்திரி’  வெளியாகும் தேதி அறிவிப்பு! 

  ‘சத்தியவான்சாவித்திரி’  வெளியாகும் தேதி அறிவிப்பு! 

June 17, 2026
GEN Z தலைமுறையினரின் காதல், காமெடி கலட்டா ‘லவ் ஓ லவ்’

GEN Z தலைமுறையினரின் காதல், காமெடி கலட்டா ‘லவ் ஓ லவ்’

June 17, 2026

Actress

Actress Hansika Latest Images

Actress Hansika Latest Images

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty Latest Stills

November 12, 2025
Actress Hansika Latest Images

கவர்ச்சியில் கலக்கும் அமலாபால் !

November 12, 2025
Actress Hansika Latest Images

Sanchita Shetty New Photo Shoot

November 12, 2025
Tamannaah Bhatia New Photoshoot

Tamannaah Bhatia New Photoshoot

November 12, 2025

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home
  • News
  • Reviews
  • Interview
  • Stills
    • Actors
    • Actress
  • Events
  • Videos
  • Political News
  • Other News
  • Cooking
  • Astrology

© 2018 Designed ByKSK Selva - Editor: ‘Kalaimaamani’ Devi Mani

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?