
வம்பன் வசீகரமுடன் சிரிக்கிறான் என்றால் அதில் வக்கிரம் மறைவுடன் இருக்கிறது என்பதை உணரலாம்.
அத்தகைய வம்பர்கள் திரை உலகில் இருக்கிறார்கள் என்பது தொடர்புடையவர்கள் சொல்கிறபோதுதான் தெரிய வருகிறது.
நடிகை பிரியங்கா சோப்ரா கடற்கரையோரமாக மல்லாந்து படுத்திருக்கிற படத்தைப் பார்க்கிறபோது சிலரது மனங்களில் மத்தாப்பூ ஒளிரும். “இவ்வளவுதானா ?” என்கிற ஏக்கம் எழாமல் இருக்காது.
ஹாலிவுட்வாசியாகிவிட்ட பிரியங்கா தன்னுடைய ஆடை அணிகலன்களில் மேலைநாட்டு நடிகைகளுக்கு போட்டியாகவே மாறி விட்டார் என்று சொல்லலாம்.
இவரது தொடக்க கால திரையுலக வாழ்க்கை எப்படி இருந்ததாம்?
பாடல் காட்சியின்போது ஒரு இயக்குநர் எத்தகைய மனப்பான்மையுடன் இருந்தார் என்பதை தெளிவாக சொன்னது அவரது பதில்.!
“ஒரு சூடான பாடலுக்கு ஆடியபோது அன்டர்வேரை அகற்றும்படி சொன்னார். எந்த நோக்கத்துடன் சொன்னார் என்பது தெரியவில்லை.அதற்காக அவரை எதிர்த்து நான் குரல் கொடுக்கவில்லை. இப்படிப்பட்டவருடன் வேலை பார்க்க நேரிட்டதே என வருத்தப்பட்டேன்.
இம்மாதிரியான சம்பவங்கள் பல நடிகைகளுக்கு நடந்திருக்கிறது. சில டைரக்டர்கள் நடிகைகளை ஒப்பந்தம் செய்கிறபோது தங்கள் மனதில் உள்ளதை பகிரங்கமாக சொல்வதில்லை .மறைத்துக்கொண்டு படமாக்கும்போதுதான் வெளிப்படுத்துவார்கள். முத்தக்காட்சி ,அரை நிர்வாண காட்சி எடுக்கிறபோதுதான் அப்படி நடிக்க சொல்லுவார்கள். ஷூட்டிங் நடத்துவோம். தேவைப்படாவிட்டால் வெட்டிவிடலாம் என்று சமரசம் செய்யப்பார்ப்பார்கள்.
என்னை அன்டர்வேரை அகற்ற சொன்ன அந்த படத்திலிருந்து அடுத்த நாளில் இருந்தே விலகிவிட்டேன்” என்று சொன்னார் பிரியங்கா சோப்ரா.
அடப் பாவிகளா?












