
நடிகை ரோஜா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு 2 மேஜர் அறுவை சிகிச்சைகள் நடந்து முடிந்துள்ளதாகவும் தற்போது ரோஜாவின் உடல் நிலை நன்றாக உள்ளதாகவும் அவரது கணவரும் பிரபல இயக்குனருமான ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்..
ஆந்திர சட்டமன்ற உறுப்பினரான ரோஜா, உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து நடிகை ரோஜாவின் கணவரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஆர்.கே.செல்வமணி, தனது வாட்ஸ் அப் மூலம் ஒரு ஆடியோ பதிவை பகிர்ந்துள்ளார். அதில்,ரோஜா இரண்டு பெரிய அறுவைச் சிகிச்சையை மேற்கொள்வதற்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையின் சிறப்பு அறையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
.ரோஜாவுக்கு இப்போது பரவாயில்லை கடந்த வாரம் அவருக்கு இரண்டு மேஜர் அறுவை சிகிச்சைகள் நடந்தது. அது கடந்த வருடமே நடந்திருக்க வேண்டியது.ஆனால் கொரோனா லாக்டவுன் என இருந்ததால் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தது.
கடந்த ஜனவரியில் ஆபரேஷன் பண்ணலாம் என நினைத்திருந்தோம்.அது முடியாமல் போனது. இப்போ உங்கள் எல்லோருடைய பிரார்த்தனையாலும், கடவுளின் அருளாலும், இரண்டு மேஜர் அறுவை சிகிச்சைகள் நல்லபடியாக நடந்து முடிந்துள்ளது.
தற்போது ரோஜா தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார் இன்னும் இரண்டு வாரங்களுக்கு பார்வையாளர்கள் யாருக்கும் அனுமதி இல்லை என மருத்துவர்களின் கண்டிப்பான உத்தரவால் குடும்பத்தினர் கூட அவரை பார்த்து பேச முடிய வில்லை.
அவருடன் ஒருவர் மட்டுமே உடனிருந்து கவனித்து வருகிறார். இப்போது ரோஜா நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில்அவரது உடல்நிலை சீராகிவிடும் உணவு கூட கொடுக்கலாம் என மருத்துவர்கள் கூறி இருக்கிறார்கள்.அவரை காண ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் யாரும் மருத்துவமனைக்கு வர வேண்டாம்’ என்றும் அதில் தெரிவித்துள்ளார்.












