
கொரானாவின் இரண்டாவது படையெடுப்புக்கு அப்பாவிகள் எல்லாம் பலியாகி வருகிறார்கள். குறிப்பாக முதியவர்களும் ,அப்பாவிகளும் அநியாயமாக சாகிறார்கள்.
தமிழக அரசு “தங்களின் கையை மீறிப்போய்விட்டதாக” ஹைகோர்ட்டில் கதறியிருக்கிறது.
சினிமாவை மட்டும் விட்டு வைக்குமா?
தெலுங்கில் கொரட்டல்லா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி, ராம் சரண்,ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்க, காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்து வரும் புதிய படம் ஆச்சார்யா.

கிட்டதட்ட பூசணிக்காய் உடைக்கும் நிலைக்கு வந்து விட்ட இப்படத்தில் ஒரு சில ஆக்ஷன் காட்சிகள் மற்றும் ராம் சரண், பூஜா ஹெக்டே நடிக்கும் பாடல் காட்சி ஒன்றும் படமாக்கப்படவேண்டி உள்ளதாம்.
இந்நிலையில் விறுவிறுப்பாக நடந்து வந்த இப் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நேற்று முன்தினம் முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ராம் சரணும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.இது குறித்து விசாரித்தபோது, ராம் சரணின் சித்தப்பாவும், நடிகருமான பவன் கல்யாண், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவரை ராம் சரணும், அவரது மனைவி உபஷ்னா காமினினியும் தான் கவனித்து கொள்கின்றனர். பண்ணை வீட்டில் தனிமையில் இருக்கும் பவன் கல்யாணின் மருத்துவ தேவைகளை இவர்கள் இருவரும் தான் கவனித்து வருகின்றனர்.
இதனால் பவன் கல்யாண், கொரோனாவால் இருந்து குணமடைந்த பிறகு தான் ராம் சரண் மீண்டும் நடிக்க வருவார். பவன் கல்யாணிற்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து டாக்டர்களிடம், ராம் சரண் தொடர்ந்து விசாரித்து வருகிறார் என்கிறது ராம் சரணின் நெருங்கிய வட்டாரம். மேலும் இந்த படத்தில் வில்லனாக நடித்து வரும் சோனு சூட்டிற்கும் கொரோனா உறுதி செய்யப்பட்து விட்டதால்,மற்ற நடிகர்,நடிகைகள் படப்பிடிப்புக்குழுவினரின் பாதுகாப்பை கருதி படப்பிடிப்பை உடனடியாக நிறுத்த சிரஞ்சீவியும்ஒப்புதல் அழைத்து விட்டாராம் இதனால் இப் படத்தின் வெளியீட்டையும் 2021 ம் ஆண்டின் பிற்பகுதிக்கு தள்ளி வைத்துள்ளனராம்.












