‘இரும்புத்திரை’, ‘ஹீரோ’ ஆகிய படங்களை இயக்கிய பி.எஸ்..மித்ரனுடன் நடிகர் கார்த்தி முதன்முறையாக இணைந்துள்ளார். நரைத்த தாடி, நீண்ட தலைமுடி, சுருங்கிய முகத்துடன் வயதான தோற்றத்தில் காட்சி அளிக்கிறார் கார்த்தி.
இந்த திரைப்படம் கார்த்தியின் 22வது திரைப்படமாகும்.இப்படத்திற்கு ‘சர்தார்’ என பெயரிடப்பட்டுள்ளது.இதில் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படும் கார்த்திக்கு ஜோடியாக நடிகைகள் ராஷிகண்ணா மற்றும் ‘கர்ணன்’ பட நாயகி ரஜிஷா விஜயன் ஆகியோர் நடிக்கின்றனர்.இவர்களுடன், சிம்ரன், முரளி ஷர்மா, முனீஷ்காந்த், இளவரசு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, பிரபல பாலிவுட் நடிகர் சுயாஸ் பாண்டே இப்படத்தின் மூலம் தமிழில் வில்லனாக அறிமுகமாகிறார்.இப் படத்தின் கதை வெவ்வேறு விதமான இடங்களில் பிரம்மாண்டமான சண்டை காட்சிகளுடன் நடப்பதால், தென்காசியில் தொடங்கி சென்னை மற்றும் வட இந்தியாவின் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பினை நடத்தத் திட்டமிட்டு இருக்கின்றனர்.இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.












