
நடிகை நிவேதா பெத்துராஜ்.
தமிழ், தெலுங்கில் பிரபலம்.
அண்மையில் ஒரு கடுமையான குற்றச்சாட்டினை பிரபலம் ஒருவர் மீது சுமத்தியிருக்கிறார்.
“பார்ட்டிக்கு அழைப்பு வந்தது. நானும் சென்றேன். திரை உலக பிரபலங்கள் கலந்து கொண்ட பார்ட்டி அது.
என்னிடம் நெருங்கி வந்து பேசிய ஒரு பிரபலம் என்னுடைய அந்தரங்க பகுதிகளை தொட்டு தொட்டு பேசி பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்தார்” என்று குற்றம் சாட்டினார். ஆனால் யார் அந்த பிரபலம் என்பதை சொல்லவில்லை.
எதற்காக பிரபலங்களின் பெயரை சொல்லாமல் தவிர்க்கிறார்கள் என்பதுதான் புரியவில்லை.












