
உலக மகா குசும்பன்களாக இருப்பார்கள் போலிருக்கு.
கேரளத்து நண்பர்களைத்தான் சொல்லுகிறோம்.
“இந்த ரணகளத்திலும் ஒரு கிளு கிளுப்பு கேட்கிதா ?” என்று வைகைப்புயல் வடிவேலு வசனம் பேசியதாக ஒரு நினைவு.!
நாடே கொரானா இரண்டாவது அலையில் சிக்கி ஊரடங்கு சட்டத்துக்குள் முடங்கிப் போய் கிடக்கிறது.
இதில் கேரள மாநிலம் கண்ணூரில் இருக்கிற கண்ணபுரத்தை சேர்ந்த புத்திசாலி ஒருவர் நான் கண்ணூருக்குப் போகணும் .செக்ஸ் வச்சுக்கணும்.அதனால எனக்கு இ பாஸ் கொடுக்கணும்னு அப்ளிகேஷன் போட்டிருந்தார்..
போலீசாருக்கு அதிர்ச்சி. இந்த கோவிட் பயங்கரத்திலும் இப்படி ஒரு கிறுக்கனா என்கிற ஆச்சரியம்.
போலீஸ் உதவி கமிஷனர் உடனடியாக வளப்பட்டணம் போலீஸ் அதிகாரியை தொடர்பு கொண்டு அந்த ஆளை விசாரிக்க சொல்லியிருக்கிறார்.
அந்த ஆளை அழைத்து வந்து போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்திருக்கிறார்கள்.
அந்த அதி புத்திசாலி என்ன சொன்னான் தெரியுமா?
“சார் ,டைப்பிங் மிஸ்டேக் .!சிக்ஸ் ஓ கிளாக் என்று அடிப்பதற்கு பதிலா செக்ஸ்னு தப்பா டைப் ஆகிருச்சு .சாரி சார்!” னு சொல்லி எஸ்கேப் ஆகிட்டான்.
வேறென்ன செய்ய முடியும் அந்த ஆளை.! எச்சரித்து அனுப்பி வைத்திருக்கிறார்கள்.












