
சொந்த மொழியில் ஒரு படம் நடித்த பின்னர் அடுத்த மாநிலத்தில் காலடி வைப்பது ஆந்திர,கன்னட ,மலையாள நடிகைகளின் அசைன்மென்ட்டாக இருக்கிறது.
தற்போது ரஜிஷா விஜயனின் அசைன்மெண்டும் அதுதான்.
தனுஷ் -மாரி-கலைப்புலி தாணு கூட்டணியில் வெளியான கர்ணன் படத்தின் நாயகி இவர்தான்.!மலையாள நடிகை.
தற்போது
‘கொகோ’ என்ற திரைப்படத்தில் ‘கொகோ விளையாட்டு வீராங்கனை’யாக நடித்து வருகிறார்.
மேலும் சர்தார் படத்தில் கார்த்திக்கு ஜோடியாகவும் நடிக்கிறார்.
திரில்லர் கலந்த ஆக்சன் திரைப் படமாக இது உருவாகி வருகிறது
.தமிழ் மலையாளம் என இரு மொழிகளிலும் கலக்கி வரும் நடிகை ரஜிஷாவிஜயன் தெலுங்கு திரையுலகில் இயக்குனர் சரத் மண்டவாஇயக்கும் புதிய திரைப்படத்தின் மூலம் ரவிதேஜாவுக்கு ஜோடியாக கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
. கர்ணன் படத்தை தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வரும் ரஜிஷாவிஜயன் தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக மாறி வருகிறார்.கன்னட பட வாய்ப்பும் இவரை தேடி வந்துள்ள நிலையில், இவரது அடுத்தக்குறியே பாலிவுட் தான் என்கிறார்.அப்படி போடு !












