
பத்மா சேஷாத்திரி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள் கொடுத்ததாக அந்த பள்ளியின் ஆசிரியர் ராஜகோபால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
அந்த பள்ளியின் ட்ரஸ்டிகள் பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் என்பதால் தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளில் இறங்குமா என்பது தெரியவில்லை.
ஆசிரியர் ராஜகோபால் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லைகள் கொடுத்து வந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாக நடிகை குஷ்பூ,பாடகி சின்மயி, நடிகை லட்சுமி பிரியா சந்திரமௌலி உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்களும் கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் பற்றி 96, மாஸ்டர், கர்ணன் போன்ற படங்களில் நடித்த (96 திரைப்படத்தில் குட்டி திரிஷாவாக நடித்தவர் ) கௌரி கிஷன்,தான் படித்த பள்ளியில் தானும் இப்படிபட்ட சிக்கல்களை சந்தித்ததாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில்,”அவர் படித்தபோது ஆசிரியர்கள் சிலர் மாணவ – மாணவிகளை ஆபாசமாக பேசுவது, சாதியை வைத்து மிரட்டுவது, உடல் அமைப்பை கிண்டல் செய்வது, கேரக்டரை கேவலப்படுத்துவது, ஆதாரமில்லா குற்றச்சாட்டுகளை சுமத்துவது போன்ற கொடுமைகளை தான் மட்டுமல்லாது தன்னுடன் படித்த அனைவரும் எதிர்கொண்டதாக” கௌரி கிஷன் கூறியுள்ளார்.
இந்த தகவல் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.












