
சிலம்பரசனுக்கு ஃபேன் ஃபாலோயர்ஸ் லட்சக்கணக்கில் !
சும்மாவே பொளந்து கட்டுவார்கள்.அதிலும் விஷேசம் என்றால் டிவிட்டர் அலறும். எஸ்.டி .ஆரை யாராவது நக்கல் பண்ணிவிட்டால் அந்த நடிகரை கரம் வைத்து ரத்தம் கக்க வைத்துவிடுவார்கள்.இதனால் சிலம்பரசனை தொடுவதற்கே பயப்படுவார்கள். தற்போது சிலம்பரசனின் இன்ஸ்டாகிராமில் அவரை பத்து லட்சம் பேர் பின்பற்றுகிறார்கள் .அதாவது ஒன் மில்லியன் .
இதனால் உற்சாகமடைந்த சிம்பு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். “முதல் மில்லியனுக்காக மில்லியன் நன்றிகள்.” என்று தெரிவித்துள்ளார்.
அவர் தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். கல்யாணி ப்ரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு எல்லையற்ற மகிழ்ச்சி .












