
நடிகை ராஷி கன்னா .
அடிக்கடி தனது போட்டோ ஷூட் படங்களை வெளியிட்டு வருகிறவர். லாக் டவுன் காரணமாக வீட்டுக்குள்ளேயே அடங்கி கிடப்பதால் அத்தகைய புகைப்படங்களை வெளியிடவேண்டிய அவசியமாகி விட்டது.
தற்போது வீடியோ வெளியிட்டிருக்கிறார் .அது கொரானா விழிப்புணர்வு பற்றியது.
அவ்வீடியோவில் ராஷிகன்னா கூறியுள்ளதாவது,
“கொரோனா பெருந்தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்து சாமான்ய மக்கள் படும்பாட்டைப் பார்க்க சகிக்கவில்லை.
நான் என்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறேன். எனது குழுவினர் இந்த கொடூர நோயின் அச்சுறுத்தலுக்கு இடையேயும் வெளியே சென்று மக்கள் படும் இன்னல்களை காட்சிப்படுத்திக் கொண்டுவந்திருக்கின்றனர்.
நிறைய குடும்பங்கள் மிகவும் கொடுமையான சூழலில் இருக்கின்றன. கிட்டத்தட்ட பட்டினியால் வாடுகின்றன. இந்த வீடியோவைப் பார்த்து மக்கள் தங்களின் மனங்களைத் திறந்து உதவ வேண்டும் என விரும்புகிறேன்.
பெருந்தொகையைத் தான் கொடுக்க வேண்டுமென்பதில்லை. நாம் எல்லோரும் ஒன்றிணைந்தால் நம்மை நெருக்கிக் கொண்டிருக்கும் இந்த கடின காலத்திலிருந்து விடுபடலாம். நாம் ஒன்றிணைந்தால் இல்லாதோர் வாழ்வில் அற்புதங்களை நிகழ்த்தலாம். ஒன்றுபடுவோம் வாருங்கள்” என்று கூறியுள்ளார்












