
தென்னிந்திய நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசன்முதன் முறையாக விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள லாபம் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது,
இதையடுத்து விரைவில்தெலுங்கு நடிகர் பிரபாசுடன் இணைந்து சலார் என்ற படத்திலும் நடிக்கவுள்ளார்.இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக வலம்வரும் நடிகை ஸ்ருதிஹாசன் அவ்வப்போது தனது புகைப்படங்கள்மற்றும் வீடியோக்களையம் பதிவிட்டு வருகிறார்.
தற்போது தனது உடல் அழகை அப்பட்டமாக காட்டும் கண்ணாடி புடவை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
அடுத்து ஒரு செய்தி.
கவுதம் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் துருவ நட்சத்திரம்.
சில வருடங்களுக்கு முன்பே இப்படத்தின் 90சதவீத காட்சிகளும் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் இப்படத்தின் வெளியீடு என்பது இன்றளவும் ‘சிந்துபாத்’ கதையாகவே நீண்டு கொண்டிருக்கிறது என்பது ரசிகர்களின் கருத்து.
இப்பட த்தின் எஞ்சியுள்ள மீதி 10 சதவீத காட்சிகள் எப்போது படமாக்கப்பட்டு வெளியிடப்படும் என்பதே விக்ரம் ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.
இந்நிலையில் இப்படக்குழு,தற்போது துருவ நட்சத்திரம் படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும்,முதலில் இது வரை படமாக்கப்பட்ட காட்சிகளுடன் முதல் பாகத்தை உள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வைரலாக பரவி வருகிறது.












