![]()
நீண்ட எதிர்பார்ப்பில் இருந்து வருகிற விக்ரம் படத்தின் முன்னோட்டப் படப்பிடிப்பு வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது.
இந்த படத்தின் நாயகன் கமல்ஹாசன். முக்கிய வேடத்தில் விஜய்சேதுபதி. இவர்கள் கலந்து கொண்ட சோதனை ஓட்டம் எதிர்பார்த்தபடி சிறப்பாக வந்திருந்தது என்கிறார்கள் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் குழுவினர்.பகத் பாசில் ,நரைன் ஆகியோருக்கு முக்கிய வேடம் என்கிறார்கள்..
இந்த படத்தின் சண்டை காட்சிகளை அன்பறிவ் சகோதரர்கள் (இரட்டையர்.) அமைத்திருக்கிறார்கள் ..ஒளிப்பதிவு கிரிஷ் கங்காதரன், இசை அனிருத்.
முன்னோட்டப் படப்பிடிப்பு வெற்றிகரமாக நடந்திருப்பதால் விரைவில் படப்பிடிப்பு தொடங்கிவிடும் என்று எதிர்பார்க்கிறார்கள்.












