
யூ டியூப் சேனலில் அதிர்ச்சிகரமான ஒரு வீடியோ.
இளம் வயதில் இறந்த தென்னிந்திய நடிகர் நடிகையர் பத்து பேர்கள் என அந்த வீடியோவில் செய்தி போட்டிருந்தார்கள்.
நடிகைகள் ஆர்த்தி அகர்வால் ,சவுந்தர்யா ஆகியோர் படங்களுடன் நடிகர் சித்தார்த்தின் படமும் இருந்தது. இளம் வயதில் செத்தவர்கள் என்கிற தலைப்பு .
இதைப் பார்த்த ஆந்திராவிலுள்ள சித்தார்த்தின் ரசிகர் அந்த வீடியோவின் இணைப்பையும் அனுப்பி வைத்து விட்டார்.
அதைப்பார்த்த நடிகர் சித்தார்த் புகாராக யூ டியூப் நிர்வாகத்துக்கு அனுப்பி வைத்தார்.
அதை விசாரித்த நிர்வாகம் சித்தார்த்துக்கு பின்வரும் பதிலை அனுப்பியிருப்பதாக தன்னுடைய டிவிட்டர் பதிவில் கூறி இருக்கிறார்.
“சாரி….!அந்த வீடியோவினால் எவ்வித பிராப்ளமும் இல்லை”
அதற்கு சித்தார்த்தின் ரீ ஆக்சன் “அட , பாவிகளா !”
இது நமக்கு புதுசாக தெரியவில்லை. இங்கு அடிக்கடி கவுண்டமணியை காலி பண்ணிக்கொண்டிருக்கிறார்களே !












