
பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி. ‘பிசினஸ்மேன்,’குஷி ‘ஆகிய தமிழ்ப்படங்களில் நடித்திருப்பவர். கோலிவுட்டைக் காட்டிலும் டோலிவுட்டில் அதிக படங்களில் நடித்திருப்பவர். டிசைர் என்கிற ஆங்கிலப்படமும் நடிப்பு பட்டியலில் இருக்கிறது.
இவரது கணவர் ராஜ் குந்த்ரா. இங்கிலாந்தில் வணிகம்.
“சார் …என்ன விஷயம் என்பதை சொல்லுங்க.மத்த வெங்காயங்களை நாங்களே பாத்துக்கிறோம்” என்கிற எரிச்சல் சத்தம் கேட்கிறது.
ராஜ் குந்த்ராவை திங்கட்கிழமை ராத்திரியே மும்பை போலீஸ் அள்ளிக்கொண்டு போய் விட்டது.
ஒரு பெரிய நடிகையின் கணவரை போலீஸ் தூக்குகிறது என்றால் மேட்டர் சீரியஸாகத்தான் இருக்க வேண்டும்.
ஆமாம். ப்ளூ பிலிம் மேட்டரை ரிலீஸ் பண்ணினாராம். போதிய ஆதாரங்கள் கிடைத்திருப்பதால்தான் ராஜ் குந்த்ராவை கைது செய்தோம் என்கிறது போலீஸ் வட்டாரம் .
அரசியலில் செல்வாக்கு இல்லாத ஆளாக இருப்பார் போல.!












