
கலைப்புலி எஸ்.தாணு நிறைந்த பொருட்செலவில் தயாரிக்கிற படம் வாடிவாசல்.
வெற்றிமாறன் இயக்கம், சூர்யா நடிக்கவிருக்கும் வித்தியாசமான கதை .மாறுபட்ட கேரக்டர் .தமிழர்களின் வீர விளையாட்டினை மய்யமாக வைத்து எழுதப்பட்ட கதை. சி. செல்லப்பா எழுதியது.
தற்போது சூர்யா இயக்குநர் பாண்டிராஜின் படத்தில் நடித்துவருகிறார். பிரியங்கா அருள் மோகன் நாயகி.சன் பிக்சர்ஸின் பெயரிடப்படாத படம். இமான் இசை.
சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 22 ஆம் தேதி மாலை முதல் போஸ்டர் வெளியாகிறது.
இந்த படம் முடிந்த பின்னர் வாடி வாசல். சூர்யாவுக்கு எதிர்நாயகியாக நடிக்கப்போவது ஆன்ட்ரியா . வடசென்னையில் நடித்தவர். ‘விடுதலை ‘படத்தை முடித்துவிட்டு வாடிவாசலுக்கு வருகிறார் வெற்றி மாறன்.மிகவும் எதிர்பார்க்கப்படுகிற படம்.
பிறகென்ன பிரமாண்டமான வெற்றி விழாவுக்கு இப்பவே பிளான் ரெடி !












