
வெங்கட்பிரபு இயக்கத்தில், சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள ’மாநாடு’படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது மிகவும் வேகமாக நடந்து வருகிறது.
இப்படத்தை வரும் ஆயுத பூஜை தினத்தில் வெளியிட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில்,சிலம்பரசன் அடுத்ததாக ‘பத்து தல’மற்றும் கவுதம் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் உருவாகும் ’நதிகளிலே நீராடும் சூரியன்’ என்ற படத்திலும் நடிக்க இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் தற்போது ’நதிகளிலே நீராடும் சூரியன்’ படத்தின் முதல் கட்ட பணிகள் நேற்று முதல் சென்னையில் தொடங்கியுள்ளதாகவும்,சிலம்பரசன் கலந்து கொண்ட இப்படத்தின் போட்டோ சூட் நடத்தி முடிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












