
மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் இன்று டெல்லி புறப்பட்டு சென்று விட்டார்.
இன்று மாலையில் நடக்கவிருக்கும் ஒன்றிய அரசின் ஒளிபரப்பு திருத்த சட்ட முன்வரைவு பற்றிய கூட்டத்தில் தன்னுடைய ஆணித்தரமான கருத்துகளை எடுத்து வைக்க விருக்கிறார் இதைத் தவிர வேறு நிகழ்வுகள் அவரது அஜெண்டாவில் இல்லை.
ஆனால் அரசியல் வட்டத்தில் அவரது விஜயம் அங்கு ஒரு பரபரப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.
கமல்ஹாசனைத்தவிர தமிழகத்திரை உலகம் சார்பில் வேறு எவரேனும் டெல்லி சென்றிருக்கிறார்களா என்பது தெரியவில்லை.
இயக்குநர் இமயம் பாரதிராஜாவை தொடர்பு கொண்டால் தொலை பேசியை தொட்டால் பாவம் என அவரது உதவியாளர்கள் கருதி விட்டார்கள் போலும்.!
சரி தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ராமசாமியைத் தொடர்புகொண்டால் அங்கேயும் பேப்பே .! போனை எடுக்கவில்லை.












