
இயக்குனர் ஸ்ரீஜித் விஜயன் இயக்கத்தில் தயாராகி வரும் சைக்கலாஜிக்கல் த்ரில்லர் திரைப்படம் ‘ஷெரோ’ .
இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
படத்தைப்பற்றி இயக்குனர் ஸ்ரீஜித் விஜயன் பேசுகையில்,’ ஷெரோ, ஒரு சைக்கலாஜிக்கல் திரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் திரைப்படம்.
இந்தப் படத்தில் சாரா மைக் என்ற கதாபாத்திரத்தில் அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணாக நடிகை சன்னி லியோன் நடிக்கிறார்.அதாங்க போர்ன் ஸ்டார் .நிர்வாணமாக நடிப்பதற்கும் தயங்காதவர்.
விடுமுறையை கழிப்பதற்காக அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வருகை தருகிறார். இங்கு அவர் எதிர்கொள்ளும் சம்பவங்கள் தான் படத்தின் கதை. சைக்காலஜிக்கல் திரில்லர் படமாக இருந்தாலும், இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகளுக்கும் முக்கியத்துவம் உண்டு. இதற்காக நடிகை சன்னிலியோன் கடுமையாக பயிற்சி செய்து, உரிய பாதுகாப்புடன் நடித்தார்.
மூணாறு மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்தப் படம் ஒரே நேரத்தில் தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகி உள்ளது” என்கிறார்.












