
போராட்டமே வாழ்க்கை என வாழ்ந்து மறைந்தவர் தேவிகா.
அன்றைய கதாநாயகர்களின் அன்பினை அதிக அளவில் பெற்றிருந்தவர் தேவிகாதான்.!
பின்னணிப்பாடகர் தேவதாஸ் என்பவரை விரும்பி திருமணம் செய்து கொண்டார். அது அவருக்கு நெருக்கடி காலமாக இருந்தது.
இருவருடைய இணக்கமான காலத்தில் உருவானவர்தான் நடிகை கனகா. தாயின் மன உளைச்சல் கருவில் இருந்தபோது பாதித்ததோ என்னவோ,கனகாவின் வாழ்க்கையும் புதிராகவே இருக்கிறது இன்று வரை.!
திரண்ட சொத்துக்களுக்கு உரிமை கொண்டாடினார் தேவதாஸ்.
கணவனை விட்டு விலகியே வாழ்ந்தார் தேவிகா.
சொத்துகள் தனக்கே என மகள் கனகா போராடினார். ரகசிய திருமணமும் நாசமாகிப்போனது.
“தகுதியில்லை ,மன நிலை சரியில்லாமல் வாழ்கிறாய் “
அப்பனே சான்றிதழ் கொடுக்க மகளுடன் மோதல் .
படங்கள் சரிவர போகவில்லை. வாழ்க்கையிலும் போராட்டம். கனகா பொதுப்பார்வையிலிருந்து விலகியே இருந்தார்.
அடைத்த வீட்டுக்குள் வருடக்கணக்கில் பூனைகளுடன் வாழ்க்கையென்றாகிவிட்டது. அவரை பட உலகம் மறந்தது.
தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் கனகா என்னவானார்?
அவருக்கு கேன்சர் .கேரளத்தில் வாழ்கிறார் .ஆசிரமம்தான் தங்குமிடம் என்று படத்துடன் செய்தி வந்தது. ஆனால் அது அவரது படமே இல்லை!
தற்போது ‘இவர்தான் கனகா “என்று கொழு கொழு முகமுடன் ஒரு வீடியோ.ஆனால் அவர் அசல் கனகாவா என்கிற சந்தேகம் இருக்கிறது.












