
தற்போது நாட்டில் பரபரப்பு செய்தியாக பற்றிக்கொண்டு எரிவது நீட் தேர்வு தான்.!
எந்த மாநிலத்தில் எத்தனை மாணவி ,மாணவன் தற்கொலை செய்து கொண்டிருப்பார்களோ என்கிற பதைபதைப்புடன் தொலை காட்சி பேட்டியின் முன்பாக மக்கள் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள்.
மாநில அரசின் பட்டியலில் இருந்து ஒன்றிய அரசு கல்வியை தன்வசம் எடுத்துக்கொண்ட பிறகுதான் நீட் முளைத்தது.
மாநில சுயாட்சிக்கு எதிராக ஒன்றிய அரசு முனைந்து நின்ற காலத்தில் மூச்சை அடைத்துக்கொண்டு ஆதரவு காட்டியது அதிமுக அரசுதான்.! மாநில சுயாட்சியை அடகு வைத்து விட்டதாகவே சொல்லலாம்.
நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் மாணவ ,மாணவியர் பலி ஆகி கொண்டிருக்கிறார்கள்.
நீட் திட்டத்தை எதிர்த்து கடுமையாக குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது மக்கள் நீதி மய்யம்.
ஆட்சியில் அமர்ந்துள்ள திமுகழகம் முள்ளில் விழுந்து விட்ட உரிமையை மீட்டெடுக்கிற முயற்சியில் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளில் ஈடு பட்டிருக்கிறது.
மக்கள் நீதி மய்யத்தலைவர் கமல்ஹாசன் தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்.












