
திருமலைக்கு தரிசனம் செய்ய வந்த நடிகை சமந்தாவை குத்திவிட்டால் அவர் சும்மா இருப்பாரா?
அதிகாலை தரிசனத்துக்கு வந்த சமந்தாவிடம் திருப்பதியை சேர்ந்த பத்திரிகையாளர் மைக்கை நீட்டினார்.
சாமியை கும்பிட்டுவிட்டு வந்த அவரும் செய்தியாளரின் கேள்வியை புன்னகையுடன் எதிர்கொள்ள ,அவரோ ‘நாக சைதன்யா -சமந்தா தொடர்பான டைவர்ஸ் பற்றிய வதந்தியை’ பற்றி கேட்டு விட்டார்.
அவ்வளவுதான் ” நான் இப்ப கோவிலுக்கு வந்திருக்கேன் ,உனக்கு புத்தி இருக்கா?” என்று தலையை சுட்டிக்காட்டியபடி கேட்டு விட்டார்.
என்னத்த சொல்ல?
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு!












