
“விக்ரம்…விக்ரம் ” பாட்டுப்பின்னணி.!!! கமல்ஹாசன் என்ட்ரி.!
அஞ்சு மணி நேரம் .சாயங்காலம் 6 மணிக்கு ஆரம்பிச்சு ராத்திரி 11 மணிவரை பிக்பாஸ் வேட்பாளர்களின் அறிமுகப்படலம் .
பொண்டாட்டி புள்ளைகளோடு குடும்பத்துடன் பார்த்து கும்மி கொட்டுனவங்களும் உண்டு. புருஷன் தோள் மேல சாஞ்சுக்கிட்டு பிக்பாஸை ரசிச்சவங்களும் உண்டு.
இந்த வருஷம் கிழங்கட்டைகள் அவ்வளவா இல்லை. ஆனா நாலஞ்சு பேரு தேறுவாங்க. பெரும்பாலும் குமரிப்பெண்களின் உள்ளத்திலே குடியிருக்க வாடகை என்ன தரவேண்டும் ரேஞ்சுதான்.!
அதனால கவர்ச்சிக்கு வறுமையே இல்லிங்க.!
அபிஷேக் ராஜான்னு ஒரு அராத்து.ஆர்ஜே.!வாயி..வாயி ….அப்படி ஒரு வாயி ! சில நேரங்களில் எரிச்சல் குமுறிக்கிட்டு வரும் ! அதனால சண்டைகளை எதிர்பார்க்கலாம்.! போதாக்குறைக்கு சூப்பர் சிங்கர் பிரியங்கா தேஷ்பாண்டே.! வலிக்காம ஊசி போடுற கில்லாடி.!
அப்புறம் திருநங்கை நமீதா.நாட்டுப்புற பாடகி சின்னப்பொண்ணு.தமிழ் ராப்பர்ஸ் ஐக்கி அதாவது ஐக்கியம் ,இமான் அண்ணாச்சி ,கண்ணீர் விடுவதுக்குன்னே ஹைதராபாத் பாவ்னி ,மலேசியப்பொண்ணு நமீதா இவங்கல்லாம் கூட்டத்தில் தண்ணிப்பாம்பு விடுற ரகம் மாதிரி தெரியிது !!சின்னபொண்ணின் ஓவர் மேக்கப்பே விவகாரத்தை உசுப்பி விடுறதுதானே!
ஜெமினி -சாவித்ரியின் பேரன் அபிநய் , மாடல்ஸ் ஸ்ருதி ,அக்ஷ்ரா ( உலகநாயகனின் பொண்ணுங்க இல்லைங் !) வச்சு செய்றதுக்குன்னே நாடக நடிகை தாமரைச்செல்வி ( பார்க்கவே பாவமா இருக்கு. ஆனா கிராமத்துப் பொண்ணு !பாம்பா ,பழுதான்னு தெரியல.) பாக்யராஜின் உதவியாளர் டி .வி .புள்ளி ராஜா ஜெயமோகன் ,ஜெர்மனியை சேர்ந்த மதுமிதா, இசைவாணி இப்படியாக ஒரு 18 பேரு .!
போன வருஷம் சாப்பாட்டு பிரச்னை ,கக்கூஸ் கழுவுற பிரச்சனைன்னு சண்டைக்கு பஞ்சம் இல்லாம இருந்தது.இந்த வருஷம் விவகாரங்களுக்கு பிறப்பிடமே அங்கதான்னு தோணுது. சேரன் அங்க தொட்டார்னு எல்லைப்பிரச்னையை தூண்டிவிட்டு மீராமிதுன் கண்ணீர் விட்ட கதை மாதிரி இந்த வருஷம் நிறைய எதிர்பார்க்கலாம்.
சரி ,மக்கள் நீதி மய்யத்தலைவர் கமல்ஹாசனை பார்க்க முடியுமா ?அரசியல் இருந்ததா?
ஆரம்பமே அங்கதான்சார் !முழுக்க முழுக்க அவருக்குப் பிடித்தமான திராவிடக் கலர்தான்.!கருப்பு! “நான் மக்களின் பிரதிநிதியாக நிக்கிறேன்!”
“தீர்ப்பு வரவே 25 வருஷம் ஆகுது.!அப்புறம் எதுக்கு ஜெயில்னு வைக்காம விட்டுட்டாங்க போலிருக்கு!”
அதாவது பிக்பாஸில் இந்த வருஷம் ஜெயில் இல்ல .அதைதான் இப்படி நைஸ் குத்தா குத்துனாரு.!
“இமான் அண்ணாச்சியா வரனும்தான் பார்த்தேன்.ஆனா இப்படி சேட்டு டிரஸ்ச கொடுத்து மாத்திட்டாங்க “ன்னு அண்ணாச்சி சொன்னதுக்கு கமலின் பதில் என்னவா இருக்கும்னு நினைக்கிறீங்க?
“நாடு முழுக்க அந்த முயற்சி நடந்துக்கிட்டுதான் இருக்கு.! ஆனா அண்ணாச்சிகதான் அண்ணாச்சியாவே இருக்காங்க!”
வடநாட்டு பெருமுதலாளிகளான அதானி ,அம்பானியின் தொழில் துறை ஆதிக்கத்தைதானே குறிப்பிடுகிறார் ?
தொடக்கத்தில் கமல் பார்வையாளர்களை விளித்ததில் “உயிரே ,உறவே ,தமிழே !என்கிற அழைப்பு வேறு வார்த்தைகளில் வெளிப்பட்டதே..!மொழியின் சிறப்பு ! ஆனாலும் அது அவரது அரசியல் கூட்டங்களில் ஒலிக்கின்ற உயிரோட்டமுள்ள உணர்வு பூர்வமான அடுக்கு .!
அரசியல் இல்லாத ஒரு முக்கியமான தகவலும் வந்தது.
கமல்ஹாசனை குழந்தை பருவத்தில் ஜெமினி மாமாவும் சாவித்ரி அத்தையும் தத்து எடுக்க நடந்த முயற்சி !நமக்கு புதுசா தெரிஞ்சது !
வழுக்கி விழலாம் வாங்கன்னு நாரதரை ஒரு பொண்ணு வம்பு இழுக்கிற நாடகப்பாட்டு ஏழரையை கூட்டுமான்னு தெரியல. ஆனா கிராமத்து நாடகங்களில் இதெல்லாம் ரொம்ப ரொம்ப சாதாரணம்.!
பார்க்கலாம். அடுத்த வாரம் வரை காத்திருங்கள் .
உங்களின் வம்பன்.!












