
ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்.வறுமையையும் ,செழுமையையும் பங்கிட்டுக்கொண்டு வாழ்ந்தவர்கள்.
அண்ணன் ,தம்பி என்கிற உறவினைத் தாண்டி நெருங்கிய நண்பர்களாகவும் பேசிக் கொள்வார்கள்.
தமிழ்ச்சினிமா இசையில் புதிய மாற்றத்தைக்கொண்டு வந்தவர்கள் .கடல் தாண்டி தமிழின் இசையை கேட்கச் செய்த பெருமகன்கள்.
“என்ன பெயரிடுவது ?”என்று கேட்டு உலகினை வியக்க வைத்த பெருமைக்குரிய அரசர்.
இசைஞானி இளையராஜாவின் பாசத்திற்குரிய தம்பியாக பிறந்து ,அண்ணனுக்கு உதவியாக மெய்யான கரமாக இருந்தவர் கங்கை அமரன்.
விதியின் விளையாட்டில் சிக்கி பிரிந்து வாழ வேண்டிய கால கட்டமும் வந்தது.
அதுவும் நேற்றுடன் முடிந்தது.
அண்ணன் அழைத்து தம்பி சென்றாரா? தம்பி தானாக சென்று அண்ணனை சந்தித்தாரா என்பது இங்கே கேள்வியில்லை.
இருவரும் இணைந்தனர். ரத்தபாசம் இணைத்தது. ஒரு தாய் பிள்ளைகள் ஒன்றாக இணைந்தார்கள்.












