
தென்னிந்திய முழுமைக்கும் நன்கு அறிமுகமாகி விட்டவர் மக்கள் செல்வன் விஜயசேதுபதி.
இவர் நடித்து விரைவில் திரைக்கு வரவிருக்கிற உலகநாயகன் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம் ‘விஜய்சேதுபதிக்கு மிகப்பெரிய அளவில் இந்திய மார்க்கெட்டில் பேசப்படுவதாக இருக்கும் என்கிறார்கள். இவரது மகள் ஸ்ரீஜா கடந்த ஆண்டு முகில் படத்தில் அறிமுகமாகியிருந்தார்.
தற்போது மகன் சூர்யாவும் நடிப்பதற்கு வந்து விட்டார் என்கிறார்கள். பள்ளி மாணவரான இவர் பைக் ஓட்டுவதில் கில்லாடியாம்.! இவர் முன்னரே சிந்துபாத்தில் நடித்திருந்தவர்தான் .
தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தில் அப்பா விஜய் சேதுபதியுடன் நடிக்கிறார் என்கிறார்கள். இந்தப்படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது.












