
இது என்ன காலக் கூத்தோ தெரியவில்லை.
நம்ம ராதாகிருஷ்ணன் பார்த்திபன் சார் பேச்சில் மட்டுமில்லை ,எழுத்திலும் நைஸ் குத்து குத்துவார் என்பது தெரிந்ததுதான்.
வலிக்காமல் குத்துவார் எதிரில் இருப்பவருக்கு.!
நேற்று அவரது டிவிட்டர் பதிவில் குத்தியது எவரை ?
பிரதமர் மோடியையா?
அவ்வளவு துணிச்சல் இருக்கா?
நாளைக்கு இன்கம் டாக்ஸ் ரெய்டு வந்துவிடும் என்கிற பயம் அவர்க்கு இல்லையா?
அப்படி என்னய்யா இருக்கு அந்த டிவிட்டர்ல?
“தேசிய விருதுக்கா?”
என்ன ஒரு கலை மதிப்பு?
பிரதமரின் பெயரை உச்சரித்தாலே தேசிய விருதென்றால், ”மோடிஜீக்கு ஜே”என கோஷமிடும் கூட்டத்தில் ஒவ்வொருவருக்கும் கொடுப்பாங்களாக்கும் ஒவ்வொரு மயில் விருது.”
இதாங்க அந்த பதிவு!

இளையராஜாவை நக்கல் அடிப்பதாக நினைப்பதற்கும் இடம் இருக்கே என்கிறீர்களா ?
ரஜினியைக்கூட இந்த நக்கலில் சேர்த்துக்கொள்ள முடியுமே?
கூவி கூவி கொடுக்கிற நிலைக்கு விருதுகள் வருமானால் திறமையாளர்களுக்கு மதிப்பு இல்லாமல் போய் விடும்.!
இன்னொரு பதிவும் இருக்கு!!!
“வெறுப்பை பருப்பாய் கடைந்து,அதில் அருவருப்பையும் அவமதிப்பையும் தாளித்துக் கொட்டி Dal Makhani செய்யும் சிலர் நிறைந்த இந்நாட்டிற்கு இப்படம் அவசியம். (லால் சிங் சத்தா) தூர்தர்ஷனிலிருந்து சுதந்திர தினத்திற்கு பிரதமரின் கோரிக்கைப் பற்றி ஒரு வீடியோ அனுப்புங்கள் என கேட்க,நான் அனுப்ப…. Continue”
இதுக்கு என்னவோய் சொல்றது?












