
வில்லங்கத்துக்கும் விஷாலுக்கும் அப்படியென்ன ஒட்டுதலோ ,மனுசனை விடாது துரத்துகிறது.
விஷாலின் ஜிக்ரி தோஸ்த்துகளான நந்தா ,ரமணா இணைந்து தயாரிக்கிற லத்தி படத்தில் விஷால்தான் நாயகன்.இது விஷாலுக்கு 32 -வது படம். இது மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கிறது.
33-வது படம் மார்க் ஆண்டனி. சூப்பரான டைட்டில். ஆதிக் ரவிச்சந்திரன் டைரக்சன் .வினோத் தயாரிக்கிறார்.இந்த படத்தில்தான் டைரக்டருக்கு தயாரிப்பாளருக்கும் முட்டல் மோதல்.!
“அடுத்த கட்ட படப்பிடிப்பில் என்னெவெல்லாம் ஷூட் பண்ணப்போகிறீர்கள்.,ரைட்டிங்கில் கொடுங்க ?” என்று தயாரிப்பாளர் வினோத் கேட்டிருக்கிறார்.
முதல் போட்ட மனுஷன் ,கேட்கத்தான் செய்வார்!
இயக்குநரின் கடமை என்ன ….சம்பளம் கொடுக்கிறவர் கேட்கிறபோது பதில் சொல்லத்தான் வேண்டும் ?
“உங்களுக்கு ஸ்கிரீன் பிளேன்னா என்னன்னு தெரியுமா ,உங்கள்ட்ட அதெல்லாம் சொல்ல முடியாது! “என்று சொன்னதாக சொல்கிறார்கள்.
காசு போட்டவர்க்கு சுர்ர்ன்னு ஏறிடுச்சு!
“எத்தனை நாளைக்கு ஷூட் பண்ணப்போறே, ஒவ்வொரு நாளும் என்ன எடுக்கப் போறீங்களோ அதெயெல்லாம் டீட்டெயிலா எழுதிக் கொடுங்க.இல்லேன்னா நோ ஷூட்டிங்” என்று சொல்லிவிட்டாராம்.
இதன் பிறகு டைரக்டர் தனது குழுவினருடன் கலந்து பேசி தயாரிப்பாளரிடம் சொல்லியிருக்கிறார்.
தற்போது படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.












