
அஜித்குமாருக்கு ரசிகர்மன்றங்கள் அதிகாரப்பூர்வமாக இல்லை. ஆனாலும் ரசிகர்களின் ஆதரவு படத்தை பாக்ஸ் ஆபிசில் நிறுத்துகிற அளவுக்கு இருந்து கொண்டிருக்கிறது.
கலவையான விமர்சனங்களை பெற்றாலும் கலெக்சனில் நின்று பேசும்.!
கடந்த படங்களில் வசந்த விழா கொண்டாடிய போனி கபூர் தற்போது கலக்கத்தில் இருப்பதாக சொல்லுகிறார்கள்.
அஜித்தை வைத்து எடுக்கிற படத்தின் ஷூட்டிங் பாங்காக்கில் தொடங்குகிறது. சக நடிகையான மஞ்சு வாரியர் லொக்கேஷனில் இருக்கிறார்.
படப்பிடிப்பு நடக்கிறபோது வந்துவிடுவேன் என்று அஜித் சொல்லியிருப்பதால் படக்குழுவினர் மும்முரமாக வேளைகளில் இறங்கி இருக்கிறார்கள்.
தெலுங்கில் மட்டும் இப்போதே 100 கோடி அளவுக்கு இந்த படம் வியாபாரம் ஆகியிருக்கிறது.
தமிழகத்தில் இன்னும் சூடு பிடிக்கவில்லை. எந்த அளவுக்கு வியாபாரம் ஆகும் என்பது தெரியாமல் போனி கபூர் வருத்தத்தில் இருப்பதாக சொல்லுகிறார்கள்.
ஆனால் மொத்த லாபத்தையும் அள்ளுகிறபோது அடைகிற மகிழ்ச்சியை வெளிக்காட்ட மாட்டார்கள்.












