
நேற்று வரை இருவர்க்கும் திருமணம் நடக்கவில்லை .அதனால் காதல் அவர்களிடையில் இருப்பதாக நம்பப்பட்டது.
அந்த நம்பிக்கையையும் மீடியாக்கள் தகர்த்து விட்டன.
பாகுபலி சூப்பர் ஸ்டார் பிரபாஸ் மும்பை நடிகையின் உடல் அழகில் கிறங்கி விட்டார்.இருவருமே டேட்டிங் என போஸ்டர் செய்தி போட்டுள்ளன .
ஆந்திரத்து பிரபாஸ் ,கன்னடத்து அனுஸ்கா இருவரும் காதலர்கள்.ஆண்டுகளை கடந்து காதலில் பயணிக்கிற அவர்களுக்கு எப்போது திருமணம் நடக்கலாம் என்பது பற்றி ஆருடங்கள் சொன்னார்கள். பத்திரிகையாளர்கள் ஜாதகமும் கணித்தார்கள்.
பிரபாஸ் வயது 42. அனுஷ்கா வயது 40 .
இன்றுவரை திருமணம் பற்றி இருவருமே வாயைத் திறக்கவில்லை.
ஆண் வயது 60 -ல் கூட பிள்ளை பெற வாய்ப்பு இருக்கிறது.ஆனால் பெண்ணுக்கான வாய்ப்பினை இயற்கை 40க்கு மேல் அனுமதிப்பதில்லை.
40 கடந்தும் இருவரும் திருமணத்தை கடத்திக்கொண்டு போகிறார்கள் என்றால் ?
இருதரப்பிலும் மவுனம்.!
இந்த நிலையில்தான் அனுஸ்காவை பிரபாஸ் கழற்றிவிட்டார் .பாலிவுட் நடிகை கிரித்தி சனான் மீது ஆழமான நட்பு வைத்திருக்கிறார் என்பதாக ஊடகங்கள் ஊதி தள்ளுகின்றன.
இருவருமே கரண் ஜோகரின் வீடியோ பேட்டியில் ஒருவரை பற்றி ஒருவர் நெருக்கமான அன்பினை பற்றி பேசி இருக்கிறார்கள்.
ஆனால் இது அவர்களிருவரும் நடித்து வரவிருக்கிற படத்துக்கான புரமோஷன் வேலையே தவிர வேறு எதுவுமில்லை என்று மூத்த பத்திரிகையாளர்கள் சொல்கிறார்கள். பெரிய படங்களுக்கான மார்க்கெட் வேலையை கரண் ஜோகர் செய்வது வழக்கம்.
கோலிவுட்டிலும் இப்படி புரமோஷன் வேலைகள் நடப்பது உண்மை.
“பிரபாஸும் கிருத்தி சனோனும் நல்ல ஜோடியாக இருக்க முடியுமா ,யோசித்துப்பாருங்கய்யா “என்று அவர்களே கூறுகிறார்கள்.












