
ஆர்.எஸ்.எஸ்.என்கிற அமைப்பு பிஜேபியின் தாய் அமைப்பு. இது இடும் கட்டளைகளைத்தான் பிஜேபி அரசு செய்து வருகிறது.
அண்மையில் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பினர் முக்கிய நகரங்களில் பேரணி நடத்தினார்கள். கேரளத்தில் இருக்கிற கடம்பளிப்புறம் வயிலியம் குன்னு என்கிற கோவில் அருகில் ( பாலக்காடு.) ‘நீயந்தானல் ‘என்கிற படப்பிடிப்பு நடந்தது.
மீசல்மான் சீனு இயக்கம்.
இந்து -முஸ்லீம் காதல் கதை.
“இதை எப்படி எடுக்கலாம் ?”என்று கேட்டு ஆர்.எஸ்.எஸ்.கும்பல் தகராறு செய்தது. அங்கிருந்த படப்பிடிப்புக் கருவிகளை அடித்து உடைத்தனர்.இதனால் அங்கு படப்பிடிப்பு தொடர்ந்து நடக்கவில்லை.
இந்த காட்டுமிராண்டித்தனத்தை வில்லன் நடிகர் ஹரிஷ் பெராடி கடுமையாக கண்டித்திருக்கிறார். நடிகர் சங்கமான ‘அம்மா’ அமைப்பு எடுத்த நடவடிக்கை என்ன என்று கேட்டிருப்பதுடன் கதாநாயக நடிகர் ஒருவர் தொடர்ந்து படப்பிடிப்புக்கு தாமதமாக வருவதை ஏன் கண்டிக்கவில்லை என்றும் கேட்டிருக்கிறார்.












