ஸ்டூடியோ கிரீன் .ஞானவேல் ராஜா தயாரிப்பு.
“ நான் அமெரிக்கா சென்று என்னுடைய உடல்நிலை காரணமாக நான் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த பிறகு எந்த கூட்டமாக இருந்தாலும் நான் செல்வதில்லை. இங்கே திரளாக கூட்டம். ஆனால் நான் இங்கு வரவேண்டும் என்று என் மகனுக்கு என் மீது நாட்டம். நான் வர மறுத்தால் என் மகனுக்கு வந்து விடுமோ வாட்டம், என லேசாக பார்க்க நினைத்தேன் ஒரு சின்ன நீரோட்டம் ஒரு மேலோட்டம்.
நான் வரவேண்டும் என்று எஸ்.டி ஆர். ரசிகர்களுக்கோ போராட்டம்…
இப்படியே நான் விட்டால் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசுவேன். விடியும் வரை கூட பேசுவேன். ஆனால் என் மனைவி உஷா ராஜேந்தர் விழாவிற்கு வந்திருக்கிறார்.
“நீங்க பேசாம தான் வரணும்”… ஏனென்றால் என் இதயம் அவள் !
என் உயிர் உள்ளவரை உஷா என நான் கரம் பிடித்த என் மனைவி. என் இதயம் உயிருள்ளவரை உஷாவிலே வாழ்க்கையிலே வந்தது ஒரு உதயம். அதற்கு காரணம் என் உயிர் உள்ளவரை என் இதயம். அவளால் வந்தது தான் என் வாழ்க்கையிலே சதயம். இந்த இதயம்.. உதயம்.. சதயம் என்னவென்று யாருக்கு தெரியவில்லை,
இவை எல்லாவற்றுக்கும் மேலே இந்த விழாவிற்கு நான் வந்ததற்கு காரணம் தமிழ்நாட்டில் பிறந்து ஆஸ்கார் வரை சென்று தமிழ் மண்ணின் பெருமையை, இந்த இந்திய நாட்டின் பெருமையை, மதங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு மதத்தை பார்க்காமல் நான் மதங்களை பார்ப்பவன் அல்ல… நான் மனங்களை பார்ப்பவன்! நான் இனங்களை பார்ப்பவன் அல்ல இதயங்களை பார்ப்பவன்! நான் நிறங்களை பார்ப்பவன் அல்ல.. நெஞ்சங்களை பார்ப்பவன்! அப்படிப்பட்ட நான் அந்த ஆஸ்கர் வரை சென்று விட்டு வந்த இந்த ஆருயிர் தோழனை பாராட்ட. அவருக்கு ஒரு நினைவு பரிசை கொடுக்க வேண்டும் என சொன்னார்கள்.
எதைக் கொடுக்கப் போகிறார்கள் என்று தெரியாது. என் நினைவையே கொடுப்போமா? அவர் வாழ்க்கையில் கொண்ட கனவை கொடுப்போமா? இல்லை என் மகனோடு அவர் கொண்ட உறவை கொடுப்போமா?
வந்தேன் ஒரு வீணையை கொடுத்தார்கள். அந்த வீணையை பார்த்தேன் வெள்ளி… என் இதயத்தை தர நினைத்தேன் அள்ளி… அழைத்தவுடன் வந்தேன் துள்ளி… இந்த வீணையிலே பார்த்தேன் வெள்ளி… அதுவோ வீணை கொட்டுமே அது தேனை… உனக்கு என் கையால் தந்தேன் அந்த வீணை…
என் மனைவி சொன்னார் அதிகம் பேச வேண்டாம். முகத்தை மட்டும் காட்டுங்கள் அவருக்கு நினைவு பரிசை கொடுத்து விட்டு கீழே வந்து விடுங்கள் என்று சொன்னார். மனைவி சொல்லே மந்திரம் ஆனால் அதையும் மீறி இப்போது பேசுகிறேன் இது என் தந்திரம். எல்லாம் பேச வேண்டும் என என் மகன் சொல்லித் தந்தது தாரக மந்திரம். ஒன்று மேடையில் ஏறக்கூடாது இல்லை ஏறிவிட்டால் எனது ரசிகர்களை திருப்தி படுத்தாமல் நீங்கள் இறங்க கூடாது. என் தந்தைக்கு இருப்பது கம்பீரம் என் தந்தையின் கம்பீரம் அதை வைத்து தான் என் வீரம் என் மகன் கூட்டிய உரம்
அதனால்தான் அமெரிக்கா போய் நான் வந்து இங்கே நிற்கிறேன் என்றால் அதற்கு காரணம் என் மகன். நான் ஈன்றெடுத்த என் மகன். அவனுக்காக வராமல் வேற யாருக்காக நான் வருவேன். ?”என்று உணர்வு மிக்க மனதை வார்த்தைகளால் வடித்தார் சகலகலாவல்லவன்.