தமிழ் திரையுலகில் ‘லேசா லேசா’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை திரிஷா. தொடர்ந்து ரஜினி,விஜய், அஜித், கமல்ஹாசன், விக்ரம், சூர்யா, தனுஷ் என அனைத்து நடிகர்களுடனும் நாயகியாக நடித்து கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். அதே சமயம் திரிஷா குறித்த சர்ச்சைகளும் சமீபகாலமாக அதிகரித்துள்ளன. சமீபத்தில் தவெக தலைவரும், நடிகருமான விஜய்யின் மனைவி விவாகரத்து கேட்டு தொடர்ந்துள்ள வழக்கில் ஒரு பிரபல நடிகையுடனான தொடர்பே என கூறியிருந்த நிலையில், விஜயுடன் திரிஷா, ஜோடியாக ஒரே மாதிரியான உடையணிந்து திருமண நிகழ்வில் கலந்து கொண்டது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போலானது. குறிப்பாக இருவரும் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா சென்றதாக இணையத்தில் வெளியான சில புகைப்படங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இருப்பினும், இவை எதற்கும் நடிகை திரிஷா அதிகாரப்பூர்வமாகப் பதிலளிக்காமல், தனது வேலையில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு,பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பதிவில்,”ஒரு மணி நேரத்துக்கு தூக்கத்தை இழந்தால், அதனை ஈடுகட்ட சுமார் 4 நாட்கள் ஆகும். அப்படி கணக்கு பார்த்தால், 2062 இல் தான் நான் நன்றாக உணர்வேன்” என்றும் பதிவிட்டுள்ளார். இந்த பதிவினை பார்த்த ரசிகர்கள் த்ரிஷா தூக்கமின்மையால் அவதிப்பட்டு வருகிறார்கள் என்றும், திரிஷா ஏதோ மன அழுத்தத்தில் இருக்கிறார் என்றும், அதில் இருந்து மீண்டு, திரிஷா நிம்மதியாக தூங்க வேண்டும் என்றும்,அவரது ரசிகர்கள் இணையத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.நடிகை திரிஷா தனது 42 வது பிறந்தநாளை வரும் மே 4ஆம் தேதி கொண்டாடவுள்ள நிலையில், அதற்கும் முன்பாகவே நண்பர்களுடன் ப்ரீ பர்த்டே கொண்டாட்டம் என்று அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.












