தென்னிந்திய கதாநாயகி நடிகைகளில் குறிப்பிடத்தக்கவர் சமந்தா.இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் மயோசிடிஸ் என்ற வித்தியாசமான தோல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று, தற்போது அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் சமந்தா தற்போது முன்போலவே படப்பிடிப்புகளில் கலந்துகொண்டு வருகிறார்.
விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா குஷி படத்தின் படப்பிடிப்பில் மீண்டும் கலந்துகொண்டு நடித்து வருகிறார். இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாராகி வருகிறது.
நடிகர் நாக சைதன்யாவுடனான விவாகரத்துக்கு பின்னர்,அவருடன் ஒன்றாக இருந்த ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள பங்களாவில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார் நடிகை சமந்தா. ரூ.100 கோடி மதிப்புக்கொண்டதாகக் கூறப்படும் இந்த வீட்டை நடிகர் நாகசைதன்யா மற்றும் நடிகை சமந்தா இருவரும் சேர்ந்து வாங்கியதாகக் கூறப்படுகிறது. அதிலும் நடிகை சமந்தா அதிக அளவில் பணம்செலவிட்டதாகவும் கூறப்பட்டது.
தற்போது ஐதராபாத்தில் உள்ள ஜெயபேரி ஆரஞ்ச் கவுண்டி பகுதியில் கடற்கரையை ஒட்டி 6 ஸ்லாட்டுகளுடன் கூடிய 3 படுக்கறை கொண்ட டூப்லெஸ் லக்ஷுரியஸ் ஃபிளாட் ஒன்றை வாங்கியுள்ளார். ரூ.7.8 கோடி மதிப்புள்ள இந்த வீடு 7,944 சதுர அடியுடன் 13 ஆவது தளத்தில் அமைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.












