போலீஸ் நிலயம் சென்று தரமற்ற வார்த்தைகளால் காவல் துறை அதிகாரிகளை காய்ச்சி எடுத்த ஜெயிலர் வில்லன் விநாயகனுக்கு சலுகை காட்டியதாக கேரள சட்ட மன்ற உறுப்பினர் உமா தாமஸ் குற்றம் சாட்டியிருக்கிறார். “விநாயகன் கம்யூ பார்ட்டி ஆளு என்பதால் போலீஸ் மென்மையாக நடந்திருக்கிறது. உடனே ஜாமீனில் விட வேண்டிய அவசியம் என்ன ?”என்று கேட்டிருக்கிறார்.
விநாயகன் ஒரு பெண் நிருபரை மானாவாரியாக பேசி பின்னர் மன்னிப்பு கேட்ட ஆளு. இவர் மீது ‘மீ டூ ‘ குற்றம் உண்டு.அப்படிப்பட்ட ஆள். இவர் அடிக்கடி மனைவியுடன் சண்டை போடுகிறவர் . இதனால் பக்கத்து வீட்டு ஆட்கள் ஏகப்பட்ட கடுப்பில் இருக்கிறார்கள்.
சம்பவத்தன்று வீட்டில் உள்ளவர்களுடன் பிரச்னை . புதிதாக பிளாட் வாங்கியது தொடர்பாக மனைவியுடன் சண்டை போட்டிருக்கிறார். போலீசில் புகார் செய்யவே ஒரு பெண் போலீசை அனுப்பி விசாரித்து வர போலீஸ் அதிகாரி சொல்ல அதன்படியே எல்லாம் நடந்திருக்கிறது.
விநாயகன் மீது பலவீனமான பிரிவுகளில் எப் ஐ ஆர் போட்டிருப்பதாக உமா தாமஸ் கூறுகிறார்.












