
ஊடக உலகத்தில் இன்று உளறுவாயர்கள் கூட விஜய் கட்சிக்கு பெயர் வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.!
அந்த பெயர்களைப் பார்த்து விட்டு விஜய்யே “அடடா ,இப்படியெல்லாம் பெயர்கள் இருக்கிறதா ?” என்று வியப்புக் குறிகளை போட்டுக் கொள்ளக் கூடும் .
அதிகமாக சொல்லப்படுகிற பெயர் “தமிழக முன்னேற்றக் கழகம் அல்லது கட்சி !
ஆங்கில சுருக்கமாக தமிழில் ஊச்சரிப்பதென்றால் ‘டி எம். கே.’. !
தமிழநாட்டு மக்களுக்கு மட்டுமில்லாமல் பட்டி தொட்டி முதல் அனைத்திந்தியா முழுமையும் தெரிந்திருக்கிற பெயர்.
விஜய்க்கு மட்டும் தெரியாதிருக்குமா தோழர்களே!
மிகப்பெரிய ரிஸ்க்.
துணிந்துவிட்டால் தூக்கமில்லை.
இவை தவிர கட்சிப்பெயர் அறிவித்த பிறகு தமிழ நாடு முழுமையும் இருக்கிற மக்கள் இயக்கத்தினர் சர்ச் ,மசூதி, ஆலயம் சென்று சிறப்பு ஆராதனை செய்ய வேண்டும். மக்களுக்கு இனிப்புகள் வழங்கவேண்டும் என்பதாகவும் குறுஞ்செய்திகள் அனுப்பப் பட்டிருப்பதாகவும் சிலர் சொல்வதை நம்பலாம். கொடிகள் வடிவமைத்தபின்னர் இது சாத்தியமாகலாம்.
டெல்லி செல்வதற்கான குழு இன்னும் முழுமை செய்யப்படவில்லை என்கிறார்கள்.
20 ரூபா அபிடவிட் பத்திரம் ரெடி. டெல்லியில் இன்று புஸ்ஸி ஆனந்த் இருப்பதாக வந்த செய்தி உண்மையே.
பிறகென்ன அறிவிப்பு இன்றா ,அல்லது எப்போது ?தமிழக வெற்றிக் கழகம்.இதோ விஜய் அறிக்கை இப்போது வெளியானது.















