ஜெயிலர்,லால்சலாம் படங்களைத்தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்,‘ஜெய்பீம்’ படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் ‘வேட்டையன்’.படத்தில் நடித்து வருகிறார்.லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்து வரும் இப்படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில் போன்ற பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்
இந்நிலையில்,இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ‘வேட்டையன்’ திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது. வரும் நவம்பர் 1 அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதற்கு முன்னதாக ஆயுத பூஜை விடுமுறை அக்டோபர் 12 முதல் தொடங்குகிறது. இந்நிலையில் ‘வேட்டையன்’ படம் விடுமுறை நாட்களை ஒட்டி வெளியாகும் என தெரிகிறது.இப்படத்தை முடித்த கையோடு ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171ல் நடிக்கவுள்ளார்.
இப்படத்திற்கான ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கியுள்ள நிலையில், வருகிற ஏப்ரல் 22ஆம் தேதி இப்படத்திற்கான டைட்டில் டீசர் வெளியாகவுள்ளது. இப்படத்தில் வில்லனாக பாலிவுட் நட்சத்திரம் ரன்வீர் சிங் நடிக்க உள்ளதாகவும் இது குறித்த பேச்சு வார்த்தையும் தற்போது நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில்,ரஜினிக்கு ஜோடியாக நடிகை ஷோபனா நடிக்கவுள்ளாராம்.ஏற்கனவே இருவரும் தளபதி மற்றும் சிவா திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்த நிலையில், 32 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணையவுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது ஆனால் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது












