நடிகர் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் மற்றும் ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்த வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் 10 ஆம் தேதிவெளியாகவுள்ளது, இப்படத்தை தொடர்நது அதன் இயக்குனர் த செ .ஞானவேல் மீண்டும் ஜங்கிலி பிக்சர் ஸூ டன் இணைந்து தோசா கிங் என்ற புதிய படத்தை இயக்கவுள்ளார் டி.ஜே.ஞானவேல் மற்றும் ஹேமந்த் ராவ் ஆகியோரால் எழுதப்பட்ட, இந்த பான்-இந்தியன் திரைப்படம் ஜீவஜோதி மற்றும் பி. ராஜகோபாலின் மோதலால் ஈர்க்கப்பட்டு, லட்சியம், அதிகாரம் மற்றும் நீதிக்கான போருக்கு களம் அமைக்கிறது. ஜீவஜோதி சாந்தகுமாரின் உரிமையை ஜங்கிலி பிக்சர்ஸ் கைப்பற்றியுள்ளது.
ராஜகோபால் -ஜீவ ஜோதி வழக்கில், 18 ஆண்டுகால கடுமையான சட்டப் போருக்குப் பிறகு, நீதி வழங்கப்பட்ட நிலையில் ,முறையாக உரிமைகளை பெற்று இப்படம் உருவாகவுள்ளது. இப்படம் குறித்து இயக்குனர் த செ .ஞானவேல் கூறுகையில், “பத்திரிக்கையாளராக இருந்த காலத்திலிருந்தே ஜீவஜோதியின் கதையைப் பின்பற்றி வருகிறேன். பத்திரிக்கைகள் பல விவரங்களை பரபரப்பாக்கிய போதும், கதையின் பெரும்பகுதி சொல்லப்படவில்லை. ‘Dosa King’ கதையின் குற்றம் மற்றும் திரில்லர் அம்சங்களை மையமாகக் கொண்டு, அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதை அம்பலப்படுத்தும் கடினமான கதை. நன்கு ஆராய்ந்து, வழக்கில் சொல்லப்படாத கருத்துக்களை பிணைத்து, புதியதொரு கண்ணோட்டத்துடன் ஆழமான கதையைச் சொல்ல விரும்புகிறேன். 20 ஆண்டுகளுக்கு முன்பு நான் நேரில் பார்த்த கதையைப் பகிர்ந்து கொள்வதற்கு இந்தப் படம் எனக்கு கிடைத்த வாய்ப்பாகும், என்கிறார். இப்படத்தில் நடிக நடிகையர் தேர்வு மற்றும் இதர தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.












